Date:

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கும் சாத்தியம்

இந்த மாத இறுதிக்குள் மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் ரூ.87.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 283.00 ரூபா வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு நட்டம் ஏற்படுவதைத் தடுப்பதாக இருந்தால் மண்ணெண்ணெய்யின் விலையை லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல் மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின்...

பதுளை பஸ் விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார் பதுளை - மஹியங்கனை பிரதான...

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க...

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...