Date:

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : 1000ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவராண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு...

நிர்வாண பகடி: மாணவன் மரணம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம்...

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373