நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மத்திய தபால் பரிமாற்றகத்தின் போது சுங்க அதிகாரிகளினால் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி முகவரிகளின் ஊடாக அனுப்பப்பட்டள்ள பொதிகளில் இருந்து 13,640 போதை மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த பெறுமதி 13 கோடி எனவும் சுங்கப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.