தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் எனவும் அதற்குத் தேவையான சட்டவிதிகளும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.