சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சம்பளமற்ற விடுமுறையில் செல்வதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டம் அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.