அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைகள் இயங்கிவருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவிதுள்ளார்.
தற்போது சில அரச வைத்தியசாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ மருந்துகள் மட்டுமே உள்ளதாகவும் ஏனையவற்றின் கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த பிரச்சினையை பல தனிநபர்களும் அமைப்புகளும் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து நிபுணர்கள் கவலைப்படும் நிலையில், அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தம்மிடம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார் எனவும் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.