நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டைப் மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அவர் தனது வாழ்வின் மற்றொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போது அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அவரது இருப்பு எப்போதும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.
மேலும் இந்த நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை அவர் மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என முன்னாள் பிரதமர் ராஜபக்ச பதிவு செய்துள்ளார்.