பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகரமண்டபம், கொம்பனித் தெரு மற்றும் யூனியன் பிளேஸ் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கவுள்ள சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.