இன்று முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில், மின்சாரக் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படும். இதற்கமைய, மின் கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து, பெரும்பாலும் இரண்டு தினங்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.