அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகம் இன்று (19) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், விரைவில் மேலும் இரண்டு எரிவாயு கப்பல்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்களில் ஒன்றிற்கான கட்டணம் அடுத்த இரண்டு நாட்களில் செலுத்தப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.