நாடளாவிய ரீதியில் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என்பதுடன், ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்களும் அவ்வாறு செயற்பட வேண்டுமென அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன குறிப்பிட்டார்.
இன்று முதல் இவ்வாறு நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசியை பெற்றுக்கொள்வதற்கு நெல் கைவசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இன்று முதல் அரிசி நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த திர்மானத்திற்கு அமைவாக அனைத்து ஆலை உரிமையாளர்களும் தங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், நிர்ணய விலைக்கு அதிக தொகைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில் நுகர்வோர் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
இதன்படி, நாடு அரிசி 220 ரூபாவுக்கும், சம்பா 230 ரூபா, கீரி சம்பா 260 ரூபாவுக்கு இன்றுமுதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒவ்வாருவரும் தங்களுக்கு ஏற்ற தீர்மானங்களை மேற்க்கொண்டமையே இந்த நிலைமைக்கு காரணமெனவும் அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன குறிப்பிட்டார்
இதேவேளை, நாட்டில் மக்கள் தங்களின் உழைப்பினால் கட்டியெழுப்பிய அத்தனை விடயங்களும் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மக்களே அனுபவிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.