Date:

இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் எச்சரிக்கை

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளுவென்ஸா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

காய்ச்சல், தலைவலி, சளி, மூக்கில் நீர்வடிதல், இருமல் மற்றும் பசியின்மை, சில சமயங்களில் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இதேவேளை, நாட்டில் மருந்து தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் மற்றும் நீர்வெறுப்பு நோய்க்கான மருந்துகளுக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...