தங்காலையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தங்காலை பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த அலுவலகத்துக்கு முன்பாகவே இன்று (17) முற்பகல் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.