கொச்சிக்கடை-எத்கால-கெரம்வத்த பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தோட்டமொன்றுக்குள் பிரவேசித்து தேங்காய் பறித்த நபர் மீது அத்தோட்ட உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் குறித்த நபர் தோட்டத்திற்குள் இருந்த தருணத்தில், போர 12 ரக துப்பாக்கியினால் இவ்வாறு தோட்ட உரிமையாளரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.