Date:

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று(26) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சந்தேகநபர்கள், நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் கிருலப்பனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதுடன், அவரின் தந்தை, மற்றும் தரகர் ஆகியோரிடம் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

அத்துடன், 22 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பிலும் இன்று நீதிமன்றில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 36 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றவியல் பிரிவு, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு மற்றும் பொரளை காவல்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து, நிபுணத்துவம் மிக்க பல ஆண்டுகளாக அனுபவமுள்ள அதிகாரிகளினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில், காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சிறுமி தங்கியிருந்த அறையில், எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக, அரச இரசாயன பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லிட்ரோ அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று...

காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி...

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத்...

ஜனாதிபதி இன்று முல்லைத்தீவு செல்கின்றார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல்...