அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த மாதத்தின் இரண்டாவது வாரம் வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44 தசம் 3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
யூரோ , ஸ்டர்லின் பவுன் , ஜப்பான் யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதிகளும் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணய மாற்று வீத கட்டமைப்பின் காரணமாக மாற்று விகிதங்களில் சிறிதளவு நிலையான தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.