நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் மக்கள் உணவை பெற்றுக்கொள்ள ஏற்பட்டுள்ள தடையே இந்த நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு இலட்சம் சிறுவர்களும், ஏழு இலட்சம் பாடசாலை மாணவர்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதான ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலாகஇ கல்சியம் குறைபாடு சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 50மூ குழந்தைகள் கல்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும், இது ஒரு புதிதாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையெனவும் சுட்டிகாட்டியுள்ளார்.