அரசியல் பொருளாதாரரீதியில் சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரனமற்ற நிலையில் அமெரிக்கா முழுஆதரவை வழங்குவதுடன்,சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதி அமைப்புகளுடனும் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது சர்வதேச சமூகம் தனது முழு ஆதரவை வழங்கும் என்றார்.
சமூக பாதுகாப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனை புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள் உற்பத்தியாளர்கள் சேவை வழங்குநர்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விளாபாரிகளுக்கு 2.5 சதவீதத்தின் கீழ் புதியவரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது.