அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நாட்களில் விடுமுறை வழங்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரம் முதல் வெள்ளிக்கிழமை நாட்களில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்சக்தி மற்ம் வலுசக்தி, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த திட்டம் நடைமுயயாகாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டே அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.