நுவரெலியா , நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினாலும், கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்
நேற்றைய தினம் நுவரெலியா மற்றும் நானுஒயா பிரதான நகரங்களில் டீசல் , பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பலர் வரிசைகளில் காத்திருக்கின்றனர்
எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது
செ.திவாகரன்