Date:

கழுத்து இறுகிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் (1) தோட்டத்தின் தனி குடியிருப்பு தொகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி என்ற மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தினத்தன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன்போது தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்து உள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிருந்த பட்டி அகற்றப்பட்டு, சிறுமி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (13) காலை சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...