Date:

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டே புதிய வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அணியின் செயல்திறனின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டித்தன்மை சிறப்பாக இருக்கும் எனவும் இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய குழாமில் உள்ள 11 வீரர்கள், நூறுக்கு மேற்பட்ட ரி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட...

நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக்

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று...

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்...

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க...