புத்தளம் – மதுரங்குளி பகுதியில் எரிபொருள் வரிசைக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த பகுதியில் உள்ள பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை . சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.