ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் ஒரு நாளில் மாத்திரம் இரண்டாயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கையை மூவாயிரத்து 500 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.