நேற்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் மீதான விசாரணை (கோப்)குழுவில் முன்னிலையான, மின்சாரசபையின் தலைவர், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தம்மை வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக மின்சார சபைத் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.