Date:

சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று (11) காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று (10) காலை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...