Date:

நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்- சனத் ஜயசூர்ய

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய, இந்த ஊடக சந்திப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ‘முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது. நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...