3, 900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு, இன்றைய தினம் கொடுப்பனவை செலுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.5 மில்லியன் டொலர் பணம் குறித்த கப்பலுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இன்றைய தினம் கொடுப்பனவு செலுத்தப்பட்டால், மதிய வேளையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாத நிலையில், இன்றைய தினமும் விநியோகம் இடம்பெறமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில், எரிவாயு இல்லாத நிலையில், நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினமும் எரிவாயுக் கொள்வனவு செய்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.