Date:

முன்னெப்போதுமில்லாத வகையிலான சவால்களுக்கு மத்தியிலும் வலுவான நிதி ஆண்டு முடிவுகளை வழங்கும் Sunshine Holdings

அனைத்து வணிகத் துறைகளிலும் வலுவான வளர்ச்சியடைந்துள்ள, பன்முகப்படுத்தப்பட்ட இலங்கையின் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: SUN) மார்ச் 31, 2022இல் (FY21/22) முடிவடைந்த ஆண்டிற்கான மேலிருந்து கீழ் வரையான செயல்திறன்களில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில், குழுமம் 32.2 பில்லியன் ரூபாவாக ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 32.2% அதிகரித்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபமும் (PAT) 96.9% அதிகரித்து 5 பில்லியன் ரூபாவாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

குழுமத்தின் வருவாயில் ஹெல்த்கேர், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத் துறைகளின் பங்களிப்பு முறையே 54%, 25% மற்றும் 20% ஆக உள்ளது. சுகாதாரத் துறை ஆண்டு வளர்ச்சி 37.1% ஆகவும், விவசாயத்துறை வருவாய் 64.6% ஆகவும் இருந்தது. கடந்த நிதியாண்டுடன் (FY20/21) ஒப்பிடும்போது நுகர்வுப் பொருட்கள் துறை வருவாயில் 13.2% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது, முக்கியமாக கடந்த நிதியாண்டில் (FY20/21) டெய்ன்டீ லிமிடெட் கையகப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. 21/2022ஆம் நிதியாண்டின் மொத்த இலாப வரம்பு 31.8%ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 04 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். மொத்த இலாபம் 2.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 32.3% ஆண்டு வருவாய் வளர்ச்சி மற்றும் EBIT ஆனது 5.7 பில்லியன் ரூபா, இது 61.9% ஆண்டு அதிகரிப்பாகும்.

நிதியாண்டு அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸின் தலைவர் அமல் கப்ரால், “நாட்டிற்கும் குழுவிற்கும், இந்த நிதியாண்டு சவால் நிறைந்ததாக உள்ளது. ஆரம்பத்தில் தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்களாலும் அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், முன்னோக்கி நோக்கும் வணிக உத்திகள் மற்றும் எங்களின் அனைத்து வணிகத் துறைகளின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுடன் இணைந்து, இந்த பாதகமான சூழலில் குழுவால் சவால்களைத் தாங்கி, சிறப்பான முடிவுகளை வழங்க முடிந்தது.” கப்ரால் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மின்வெட்டு ஆகியவற்றால் மக்களையும் வணிகத்துறையையும் கடுமையாகப் பாதித்தது.

எனவே, குறுகிய மற்றும் மத்திப காலத்தில், நாடு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து வெளியேறும்போது, ​​இந்தச் சூழல் இன்னும் சவாலானதாகவும் நிலையற்றதாகவும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, சவால்களைச் சமாளிப்பதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வதற்கும் சுறுசுறுப்பாகவும், மீள்தன்மையுடனும் இருக்கும் வகையில் சன்ஷைன் தனது வணிக செயல்முறைகளை மறுவடிவமைத்துள்ளது. ஒரு குழுவாக, வரவிருக்கும் மாதங்களில் வணிகத் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” என அவர் தெரிவித்தார்.

ஹெல்த்கேர் துறையானது 21/2022ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் 17.5 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவுசெய்தது, மருந்து, மருத்துவ சாதனங்கள் மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகளில் மேம்பட்ட செயல்திறனுடன், Akbar Pharmaceuticals பங்களிப்புடன் ஆண்டுக்கு 37.1% குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்தது. இத்துறைக்கான EBIT 1.6 பில்லியன் ரூபாவாக இருந்தது, இந்தத் துறையின் PAT ஆண்டுக்கு 29.9% அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...