Date:

2022ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக Asian Bankerஇனால் HNBக்கு கௌரவிப்பு

Asian Banker சஞ்சிகை வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச நிதிச் சேவைகள் விருது வழங்கும் நிகழ்வு 2022இல் 12வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக மகுடம் சூட்டி, HNB PLC, சிற்றளவு வாடிக்கயாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் நிகரற்றத் தலைவர் என்ற நற்பெயரை முத்திரைப்பதித்துள்ளது.

உலகின் வாடிக்கையாளர் நிதிச் சேவைகளுக்கான மிகவும் கடுமையான, மதிப்புமிக்க மற்றும் வெளிப்படையான விருது திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வு, ஸ்திரத்தன்மை, புத்தாக்கம், டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் செயல்முறை மறு-பொறியியலில் விரைவான, நிலையான வளர்ச்சியைக் அறிமுகப்படுத்துவதில் புதிய வரையறைகளை நிறுவும் பிராந்திய நிறுவனங்களைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மைல்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், ஒருமைப்பாடு மற்றும் சேவையில் கட்டமைக்கப்பட்ட உண்மையான கூட்டாண்மைகள் முன்னேற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் HNB நிறுவப்பட்டது. 134 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறைகளின் முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமமான பெருமை மற்றும் பொறுப்புணர்வோடு இந்தப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். இந்த விழுமியங்கள், சாதகமான காலங்களிலும் பாதகமான நேரங்களிலும் முடிந்தவரை பல மக்களுக்கு சேவையாற்றுவதற்காக, வங்கியைத் தொடர்ந்து அதன் திறன்களை மாற்றியமைக்கவும், காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்தவும் வழிவகுத்தது.” என தெரிவித்தார்.

“இலங்கையின் சிறந்த சில்லறை வணிக வங்கியாக 12வது தடவையாக அங்கீகரிக்கப்படுவது, நிச்சயமாக இந்த மரபு மற்றும் எமது முழு குழுவின் அர்ப்பணிப்பான முயற்சியின் நம்பமுடியாத அங்கீகாரமாகும். முன்னோக்கிப் பார்க்கும்போது, நாம் முன்னெப்போதுமில்லாத வகையில் சவால்களை எதிர்கொள்கிறோம், ஆனால் இந்த சிக்கல்களுக்குள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான விதைகளும் உள்ளன. முழு HNB குழுவும் இலங்கை மக்களுக்கு முன்னேற்றத்தின் உண்மையான பங்காளியாக சேவையாற்றும் எங்கள் அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது.” என மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் HNBக்கான முதன்மைப் பிரிவாக சிற்றளவு வங்கிச் சேவை உள்ளது. 255 கிளைகள் மற்றும் 795 ATMகள் கொண்ட வங்கியின் விரிவான வாடிக்கையாளர் சேவை வலையமைப்பிற்கு மேலதிகமாக, HNB டிஜிட்டல் வங்கி தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சேனல்களை மேம்படுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான, விரிவான மற்றும் பாதுகாப்பான தேவையான தொலைதூர பரிவர்த்தனை செய்வதற்கான முன்னோடியாக உள்ளது.

இதற்கிடையில், HNBஇன் Mobile Banking App ஆனது, தற்போது 300,000க்கும் அதிகமான செயலில் உள்ள பாவனையாளர்களுடன் தொடர்ந்து கைகோர்த்து நிற்கிறது. HNBஆனது Appன் வலிமையான திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, இதில் மிக சமீபத்தில் நிலையான வைப்புகளைத் ஆரம்பிப்பதற்கும் மூடுவதற்கும் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

எங்கள் அதிநவீன பின்-இறுதி மாற்றத்தின் தொடக்கத்துடன், HNB எங்கள் சேவை திறன்களை விரிவுபடுத்துவதற்கு விரைவாக தயாராகி வருகிறது. இது தேசிய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் புத்துணர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வங்கியின் திறனை மேம்படுத்தும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் எங்கள் மக்களின் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் நாங்கள் செய்த முதலீடுகள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தடையற்ற வங்கித் தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும், மிகவும் நம்பகமான, பதிலளிக்கக்கூடிய, தொலைதூர அணுகக்கூடிய வங்கி அனுபவத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது, என HNBஇன் வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிப் பொதுமுகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.

Banker சஞ்சிகையின் சிறந்த 1,000 சர்வதேச வங்கிகளில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாகத் தரப்படுத்தப்பட்டு, சர்வதேச நிதி விருது வழங்கும் நிகழ்வு 2021இல் சிறந்த வர்த்தகம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வங்கியாகத் தெரிவுசெய்யப்பட்டு, இலங்கையில் சிறந்த 3 இடத்தைப் பெற்றுள்ள HNB, இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற வங்கிகளில் ஒன்றாகும். இலங்கையின் Business Today தரப்படுத்தல் வரிசையில் முதல் 3 இடத்தைப் பெறுவதுடன், தொடர்ந்து 4வது ஆண்டாக இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373