Date:

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நிதி நிலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள HNB

கொந்தளிப்பான சந்தை சூழ்நிலைமைகளுக்கு மத்தியில், HNB PLC 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.9 பில்லியன் ரூபா வரிக்கு முந்தைய லாபத்தையும் 4.8 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்தைய லாபத்தையும் பதிவுசெய்து, பின்னடைவு, வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து வெளிப்படுத்தி முறையே 7% மற்றும் 3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குழு மட்டத்தில் PBT மற்றும் PAT முறையே 6.4 பில்லியன் ரூபா மற்றும் 5.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

முதல் காலாண்டின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNB PLCஇன் தலைவி திருமதி அருணி குணதிலக்க, “இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையிலான காலங்களை கடந்து செல்லும் போது, HNB மீண்டுமொருமுறை மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஒரு பொறுப்பான உள்நாட்டு அமைப்புரீதியாக முக்கியமான வங்கியாக, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் பேண்தகைமையை உறுதி செய்வதே எங்கள் முதன்மையான நோக்கமாகும்.” என தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2021 முதல் பணவியல் கொள்கையின் கீழ், மார்ச் 2022 வரையிலான 12 மாதங்களில் AWPLR சுமார் 400 bps அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1Q 2022இல் NIIஇல் 59% அதிகரிப்பைப் பதிவுசெய்ய வங்கிக்கு உதவியது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர கட்டண வருமானம் 42% ஆண்டு வளர்ச்சியடைந்து 3.2 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது, முக்கியமாக மேம்படுத்தப்பட்ட கார்ட் பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தக வருமானம் ஆகியவை இதில் அடங்கும்.

மார்ச் 2022 நிலவரப்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரூபாயின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, 2022இன் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 7.5 பில்லியன் ரூபா வர்த்தக வருவாய்களைக் கொண்டிருந்தது. வெளிநாட்டு நாணய மதிப்பிலான கடன்கள் மற்றும் முதலீடுகள் மீதான பண மதிப்பிழப்பு பாதிப்பிற்கு எதிராக வங்கி 7.4 பில்லியன் ரூபா இழப்பை பதிவு செய்தது.

வங்கியின் நிகர நிலை III கடன் விகிதம் டிசம்பர் 2021இல் 2.55% இலிருந்து மார்ச் 2022இன் இறுதியில் 2.41%ஆக மேம்பட்டது, அதே சமயம் நிலை III வழங்கல் பாதுகாப்பு 59%ஆக உயர்ந்தது, சொத்துத் தரத்தில் தொழில்துறையில் சிறந்த ஒன்றாகத் திகழ்கிறது. எவ்வாறாயினும், 2022 முதலாம் காலாண்டில் மைக்ரோ-பொருளாதார காரணிகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தைக் கருத்தில் கொண்டு, வங்கி அதிக பாதிப்புக் கட்டணமாக 13.4 பில்லியன் ரூபாவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயக் கடன் கடப்பாடுகள் மற்றும் இறையாண்மை மதிப்பீட்டின் மீள்செலுத்தலை இடைநிறுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு நாணய மதிப்பிலான அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் இறையாண்மை மதிப்பீட்டுக் குறைப்பு 6.7 பில்லியன் ரூபாய் ஆகும்.

2022இன் முதலாவது காலாண்டில் இயக்கச் செலவுகள் 21% அதிகரித்தது, இது சம்பளத் திருத்தங்கள், பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்புடன் ஒப்பீட்டளவில் அதிக கார்ட் பரிவர்த்தனை அளவுகள் மற்றும் அதிக பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரித்து வரும் பொதுவான செலவுகள் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இருப்பினும், வருவாயில் வலுவான வளர்ச்சி, 2022 முதல் காலாண்டில் 25% வருமானத்திற்கான செலவை HNB பதிவு செய்ய உதவியமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக HNBன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் கூறுகையில், “2017-2018இல் ஏற்பட்ட பாதகமான காலநிலையில் இருந்து 2019இல் துரதிர்ஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பின்னர் முழு உலகத்தையும் பாதித்த COVID-19 தொற்றுநோய் வரை கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடினமான சூழ்நிலையின் கீழ் பயணித்து வருகிறது. இலங்கை மற்றும் HNB வங்கியியல் துறையானது இந்த சவால்களை எதிர்கொண்டு வலுவாகவும் நிலையான தகைமையை வெளிப்படுத்தியுள்ளது. இன்று, இலங்கை ஒரு தேசமாக அதன் வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அடுத்த சில மாதங்கள் இன்னும் சவாலானதாக இருக்கும். அந்தவகையில், பொறுப்பு வாய்ந்த இலங்கையர் என்ற வகையில் நாம் தனிப்பட்ட, நிறுவன மற்றும் நாடு மட்டத்தில் எமது பங்கை ஆற்றுவது மிகவும் முக்கியமானது. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இது சர்வதேச நாணய நிதியம், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் ஆதரவளிக்கும் நாடுகளுடன் மிகவும் தேவையான நிதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவுகிறது.” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373