எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய விநியொகத்தர்கள் சங்கத்தினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டீசலை சந்தைக்கு விடுவிப்பதில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த நாட்களில் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும், குறித்த அளவு போதுமானதாகக் பெற்றோலிய விநியொகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.