நாளை எரிவாயுவை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் என நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 நாட்களுக்கு குறித்த எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்