ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 40,403 மில்லியன் ரூபா 81 சதத்தை நிலுவையில் வைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கும் வருடத்திற்கு 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இதேவேளை, இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலமும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.