கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 25 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 11 மாணவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.