பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் கடந்த மே 9 ஆம் திகதி, வன்முறை கும்பலொன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும், அவரது மெய்பாதுகாவலர் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட தினத்தில் கொட்டாவ பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.