Date:

விறகு தேடச் சென்ற இரு யுவதிகள் மாயம்

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா வயது 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌ ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த யுவதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். அத்தோடு, குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாக தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...