எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த காலப் பகுதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் மேலும் தெரிவித்தார்.