எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (07) கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை www.litrogas.com இன் ஊடாக பார்வையிடுமாறு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.






