வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதி நிறுவனங்களினால் தன்னிச்சையாக அதிகரிக்கப்பட்டு வருவதாக சுதந்திர வைத்திய ஆய்வகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த உபகரணங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அரசாங்கம் முறையான கட்டுப்பாடுகளை விதிக்காததன் காரணமாக இறக்குமதியாளர்கள் தன்னிச்சையாக விலைகளை அதிகரித்து அசாதாரண முறையில் இலாபம் ஈட்டி வருவதாக சங்கத்தின் தலைவர் கீர்த்தி சபுகொடன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில நிறுவனங்கள் விற்பனை விலையை விட ஏழு முதல் எட்டு மடங்கிற்கு மேல் அதிக விலையில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் விலைகள் சுமார் 200 வீதம் உயர்வடைந்துள்ளதாக கீர்த்தி சபுகொடன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக சுதந்திர வைத்திய ஆய்வகங்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி சபுகொடன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதேவேளை இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றதுஅ,
இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் சிலவற்றை இலங்கையில் தயாரிப்பது தொடர்பில் இதன் போது கலந்துரையப்பட்டதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்,
அத்துடன் எதிர்வரும் காலங்களில் 50 வீதமான உள்நாட்டு மருந்து உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது,
இதற்கு சுகாதார அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது,