நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின்விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இவ்வாறு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்படுள்ளது..
இதன்படி இன்று முதல் 10 திகதி வரை நாளாந்தம் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை, மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.