Date:

மக்காவில் முதல் முறையாக பாதுகாப்புக் கடமையில் பெண் இராணுவத்தினர்!

கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித தலங்களுக்கான பாதுகாப்பு கடமையில் பெண் இராணுவ சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெக்காவில், உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடத்தில், சீருடையணிந்த பெண் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டுவரும் நிலையில், சவூதி அரேபிய இளவரசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மக்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டவர்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், அங்கு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதுடன்,பெண்கள் தங்கள் பாதுகாவலர்களின் அனுமதியின்றி தனியாக பயணம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.

மேலும், குடும்ப விவகாரங்களில் அதிக உரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹொங்கொங் அணியை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால்...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...