மொனராகலை – தனமல்வில பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த முச்சக்கரவண்டியில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.