கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னரான காலப்பகுதி முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. நாணய கடிதம் விடுவிக்கப்பட்டு மீண்டும் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதற்கமைய, இன்றைய தினம் நாட்டை வந்தடையும் கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படும் எனவும், உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.
எவ்வாறாயினும், 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதன்பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் மீளவும் முன்னெடுக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.