வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை இன்று காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அருகில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்து கிடந்தமை கண்டறியப்பட்டது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.