பயாகல கடற்கரையில் இன்று (03) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு பயாகலை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இறந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.