சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு தொகை மருந்து பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்படி சுமார் 500 மில்லியன் யுவான்கள் பெறுமதியான மருந்து பொருட்கள் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனூடாக எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்து கையிருப்பினை பூர்த்தி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சீன அரசாங்கத்தினால் இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதறகு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட மருத்துவ பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.
மேலும் இரண்டாவது தொகுதி மருந்துபொருட்கள் எதிர்வரும் 2 வாரங்களில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது