கொழும்பு மத்திய பகுதிகளான மெசன்ஜர் வீதி மற்றும் பாபர் வீதி ஆகிய பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட எரிவாயு டோக்கன்கள் அரசியல் தலையீடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்,12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதாகவும் மற்றவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள்இதற்கு சரியான பதிலை வழங்கவில்லை
டோக்கன் விநியோகத்தில் ‘அரசியல் தலையீடு’ காணப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்தமையால் ,இது தொடர்பில் நாம் வினவிய போதே பிரதேச மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.