Date:

நாளைய தினம் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்

நாளைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் கடந்த வார இறுதியில் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், நேற்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவிப்பு

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard

Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373