தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங் களில் பரவி வருகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய – பெதிகம இடையேயான சந்திப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வண்டியின் பின்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி பாதுகாப்பற்றதால் நுழைய அனுமதிக்க முடியாது என பொலிஸார் கூறிய தையடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.